சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' தெலுங்கு ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரபல முன்னணி தயாரிப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சரவணா ஸ்டோர்ஸ்'  தயாரிப்பில் அந்நிறுவன உரிமையாளர் சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்தின் ஆந்திரா & தெலுங்கானா உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | சந்தானம் நடிப்பில் ரிலீசாகும் புதிய படம்.. தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்த அந்நிறுவன உரிமையாளர் ’லெஜெண்ட்’ சரவணன் அருள் தற்போது ஜே.டி.ஜெர்ரி (ஜோசப் டி.சாமி மற்றும் ஜெரால்ட் ஆரோக்கியம்) இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இரட்டை இயக்குனர்களான ஜேடி - ஜெர்ரி முன்னனி நடிகர்கள் நடித்த பல விளம்பர படங்களை இயக்கியவர்கள். இவர்கள் ஏற்கனவே அஜித் - விக்ரம் நடித்து அமிதாப் பச்சன் தயாரித்த உல்லாசம் படத்தையும், விசில் படத்தையும் இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக, பாலிவுட் மாடல் ஊர்வசி ரவுதெல்லா நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி ரூபன் எடிட்டிங் பணியை செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார்.இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன் ஹாரிஸின் இசையில் மோஷன் போஸ்டர், முன்னோட்டம் &  பாடல்கள் வெளியானது.

இந்த படத்துக்கு வைரமுத்து, சிநேகன், பா. விஜய், கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ராஜூ சுந்தரம், பிருந்தா, தினேஷ் நடன இயக்குனராக பணிபுரிகின்றனர்.

இந்த படத்தின் இசை உரிமம் Think Music நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் மதுரை அன்புச்செழியன் ரூபாய் 30 கோடிக்கு கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஆந்திரா தெலுங்கானா மாநில ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் ஶ்ரீ லட்சுமி மூவிஸ் திருப்பதி பிரசாத் கைப்பற்றி உள்ளார்.

இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே இந்த படத்தின் வெளிநாட்டு உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர்  AP International பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 28 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | 'அவன் இவன்' மூலம் பிரபலமான நடிகர் ராமராஜ் மறைவு.. கடைசி Reels வீடியோவால் உருகும் ரசிகர்கள்

The Legend Movie Andhra Telangana Theatrical Rights Bagged by Thirupati Prasad

People looking for online information on Saravanan The Legend Movie, The Legend movie, Thirupati Prasad will find this news story useful.