காஷ்மீர் இந்துக்களின் கதை.. பிரதமர் பாராட்டிய படம்.. பிரபல OTT-யில் தமிழில் ரிலீஸ்! எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பிரபல ஒடிடியில் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பீஸ்ட் படக்குழுவுக்கு விஜய் வைத்த ட்ரீட்.. நெகிழ்ந்து போய் அறிக்கை விட்ட நெல்சன்! முழு தகவல்

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. கடந்த மார்ச் 11 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் பல அரசியல் சினிமா பிரபலங்களாலும் பாராட்டப்பட்டது. காஷ்மீரிலிருந்து காஷ்மீரி இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை அடிப்படை கதை களமாக கொண்டு படம் வெளியாகியது.

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார். இதன் பின் படம் பற்றிய விவாதம் இந்தியா முழுமைக்கும் நடந்தது. பிரதமருடனான சந்திப்புக்கு பின் பேசிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, "பிரதமரின், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றிய பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும் தான் படத்தை மேலும் சிறப்புறச் செய்கிறது" என்று தெரிவித்திருந்தார்.  இந்த படத்திற்கு ஹரியானா மற்றும் குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்காளின் அரசுகள் வரி விலக்கை அளித்தன.

15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம், 330 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அக்னிஹோத்ரி இந்த திரைப்படத்தை "சுதந்திர இந்தியாவின் சொல்லப்படாத கதைகள்" என்ற தனது முத்தொகுப்பின் (Trilogy) இரண்டாம் பாகமாக அறிவித்தார், இதில் தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் (2019) படமும் அடுத்து வரவிருக்கும் தி டெல்லி ஃபைல்ஸ் படமும் அடங்கும். அதில் காஷ்மீர் ஃபைல்ஸ் இரண்டாவது வெளியீடு ஆகும்.

இந்நிலையில் இந்த படம் ஜீ5 ஒடிடியில் வரும் மே மாதம் 13 ஆம் நாள் வெளியாக உள்ளது. இந்த படம் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

காஷ்மீர் இந்துக்களின் கதை.. பிரதமர் பாராட்டிய படம்.. பிரபல OTT-யில் தமிழில் ரிலீஸ்! எப்போ? எதுல? வீடியோ

The Kashmir Files Movie Zee 5 OTT Release Date

People looking for online information on The Kashmir Files Movie, The Kashmir Files Movie Updates, The Kashmir Files Release on OTT will find this news story useful.