சசிகலாவை சந்தித்த.. 'ஜெயலலிதாவின்' வாழ்க்கை வரலாற்று பட 'பெண் இயக்குநர்'!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்தார்

இதனையடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பல்வேறு இயக்குநர்களால் திரைப்படமாக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வெளியான குயின் திரைப்படம் கடந்த வருடம் (2019) டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியானது.

இதேபோல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி திரைப்படம் வரும் ஏப்ரல் 23, 2020ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக நடிகை நித்யா மேனன் ஜெயலலிதா கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருந்தது. அதில் நித்யாமேனன் ஜெயலலிதா போலவே தோற்றம் கொண்டிருந்தார். இந்த திரைப்படத்துக்கு  The iron lady என்று பெயர் சூட்டப்பட்டது. இப்படத்தில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

மேலும் இந்த திரைப்படம் இயக்குநர் பிரியதர்ஷினியால் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்தப்படம் பற்றிய மேற்கொண்ட தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில் இயக்குநர் பிரியதர்ஷனி இந்த படம் தொடர்பாக சசிகலாவை சந்திப்பார் என்றும் முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவை பிரியதர்ஷினி தற்போது நேரில் சென்று சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. இயக்குநர் பிரியதர்ஷினி மிஸ்கினின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: திமுக சார்பில் போட்டியிட மனு.. உதயநிதியை சந்தித்த பிரபல இளம் ஹீரோவின் மனைவி!

தொடர்புடைய இணைப்புகள்

The Iron Lady Director Priyadarshini met sasikala சசிகலா

People looking for online information on A.Priyadhaarshini, JayalalithaaJayalalitha, Sasikala will find this news story useful.