THE GRAY MAN PREMIERE: மகன்களுடன் தனுஷ்!!.. கோட், சூட்'ல இருந்த பசங்கள பத்தி.. என்ன சொல்லி இருக்காரு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பல வெற்றிப்  படங்களை இயக்கியவர்கள் ருஸ்ஸோ பிரதர்ஸ். இவர்கள் இயக்கியுள்ள "தி கிரே மேன்" என்னும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | கோலமாவு கோகிலா ரீமேக்.. நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர்.. வெளியான மிரட்டல் 'Trailer'!!

தமிழில் அடுத்தடுத்து வித்தியாசமான நடிப்பு மற்றும் படைப்புகள் மூலம் மக்களைக் கவர்ந்த நடிகர் தனுஷ், ராஞ்சனா என்ற திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி இருந்தார். அடுத்ததாக அமிதாப்பச்சனுடன் இணைந்து 'ஷமிதாப்' என்ற திரைப்படத்திலும், அக்ஷய் குமாருடன் 'அத்ரங்கி ரே' என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இதற்கு மத்தியில், The Extraordinary Journey of the Fakir என்ற பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் வெளியான படத்திலும் தனுஷ் நடித்திருந்தார்.

இப்படி அடுத்தடுத்து உயரத்திற்கு சென்று வந்த நடிகர் தனுஷ், ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர்களான ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில், கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங், அனா டி அர்மாஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் 'தி கிரே மேன்'. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான தி கிரே மேன் என்ற நாவலை தழுவி, இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தின் டீசர் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே போல, சமீபத்தில் இந்த படத்தில் வரும் தனுஷின் சண்டைக் காட்சி ஒன்றின் வீடியோவும் வெளியிடப்பட்டிருந்தது. தி கிரே மேன் படத்தில், தனுஷ் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், கோலிவுட் ரசிகர்களும் அதிக ஆவலுடன் உள்ளனர்.

தி கிரே மேன் திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில், வரும் ஜூலை 22 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. முன்னதாக, இந்த படத்தின் பிரீமியரும் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தியாவிலும் தி கிரே மேன் படத்தின் பிரீமியருக்காக, ருஸ்ஸோ பிரதர்களான அந்தோனி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ ஆகியோர் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற தி கிரே மேன் படத்தின் பிரீமியரில், தனது இரண்டு மகன்களான யாத்ரா மஃற்றும் லிங்கா ஆகியோரை அழைத்து சென்றுள்ளார் தனுஷ். கோட், சூட் அணிந்தபடி, தனுஷ் மற்றும் மகன்கள் இருக்க, இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனுஷ் பகிர்ந்துள்ளார்.

மேலும் தனது கேப்ஷனில், தன்னை விட தனது மகன்கள் மீது தான் பலரது கவனமும் இருந்ததாக தனுஷ் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

Also Read | கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார்.. பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான கலர்ஃபுல் போஸ்டர்!!

தொடர்புடைய இணைப்புகள்

The gray man premiere dhanush attend with his sons

People looking for online information on Dhanush, Dhanush The Gray Man Movie, Dhanush The Gray Man Movie Premiere, The Gray Man movie will find this news story useful.