ராமாக DULQUER.. சீதாவாக மிருணாள்.. போருக்கு நடுவே பூத்த காதல் கதை! பட டைட்டிலுடன் வெளிவந்த போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துலகர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரும் தலைப்பும் வெளியாகி உள்ளது.

the glimpse of Sita Ramam starring dulquer salmaan mrunal rashmika
Advertising
>
Advertising

BOX OFFICE: பீஸ்ட் படத்தின் வசூல்.. டிக்கெட் முன்பதிவில் படைத்த சூப்பர் சாதனை!

துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக ஹே சினாமிக படம் வெளியானது. இதையடுத்து வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில்  இந்த பான் இந்திய படத்தில் லெப்டினன்ட் ராம் எனும் ரானுவ வீரர் வேடத்தில் நடித்துள்ளார் துல்கர், இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார் . கீர்த்தி சுரேஷின் 'மகாநதி' படத்தில் ஜெமினி கணேசனாக நடித்த பிறகு தெலுங்கில் துல்கரின் இரண்டாவது படம் இதுவாகும்.

the glimpse of Sita Ramam starring dulquer salmaan mrunal rashmika

இந்த படத்திற்கு இந்தியாவின் தலைச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான P. S. வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். திரைப்படத்தின் முதல் தோற்றத்தில், 1960 களில் உள்ள காட்சியமைப்புகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. முக்கியமாக போஸ்டர்களில் படத்தின் தனித்துவம் புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது.

நடிகை மிருணாள் தாகூர் சீதையாக நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் மூன்று கதாபாத்திர போஸ்டர்கள், ஒரு முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இந்த படத்திற்கு சீதாராமம் என பெயரிட்டுள்ளனர்.

போரூற்றி வளர்த்த காதல் கதை எனும் அடைமொழியுடன் படத்தின் அனைத்து போஸ்டர்களும் ரிலீஸ் செய்யப்பட்டன.  "உங்கள் இதயங்களை வெல்லப்போகும் ஒரு காதல் கதை! இந்த பயணத்திலும் அனுபவத்திலும் ஒரு பகுதியாக இருப்பதில் பாக்கியம்." என ந்டிகை மிருணாள் தெரிவித்துள்ளார்.

NAANE VARUVEN: ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கும் தனுஷ் புதிய BTS புகைப்படம்! ரகிட.. ரகிட..

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

The glimpse of Sita Ramam starring dulquer salmaan mrunal rashmika

People looking for online information on Dulquer salmaan, Mrunal Thakur, Rashmika Mandanna, Sita Ramam Movie will find this news story useful.