'ஆனந்தம்', 'ரன்', 'சண்டைக்கோழி', 'பையா' என தமிழ் சினிமாவில் இயக்குநர் லிங்குசாமியின் படங்களுக்கு என தனி ரசிகர்கள் உண்டு. தமிழ் சினிமாவில் மனித உறவுகளை பிரதான பேசுபொருளாக வைத்து எடுக்கப்பட்ட எண்ணற்ற திரைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றி பெற்றுள்ளன. காலத்தால் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளன. சகோதரர்களுக்கிடையிலான உறவுகளை முதன்மைப்படுத்தி ஒரு அழகான குடும்பக் கதையாகப் பரிணமித்து அனைத்து வயது ரசிகர்களுக்கும் பிடித்தமான விஷயங்களை உள்ளடக்கிய திரைக்கதையை அமைத்து மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

தனது அடுத்த படமான ரன்னில் அதுவரை சாக்லெட் பாயாக இருந்த மாதவனை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றி அதிலும் வெற்றி பெற்றார். லிங்குசாமி சார் 'ரன்' கதையைச் சொன்னார். ஷட்டரை மூடும் காட்சியைச் சொன்னவுடன்தான் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். லிங்குசாமி சார் சொன்ன வார்த்தைகள் இன்னும் அப்படியே ஞாபகத்தில் உள்ளன என்று நடிகர் மாதவன் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவர் கதை சொன்ன விதமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்றார்.
3வது படமான ஜீ அவருக்கு சற்று சறுக்கலாக அமைந்தது. ஜீ தோல்விக்கு பிறகு சண்டக்கோழி படத்தை இயக்கினார். புதுமுகமாக இருந்த விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிக் காட்டினார். அடுத்து விக்ரமின் பீமாவில் கொஞ்சம் சறுக்கினாலும் பையாவில் மீண்டும் எழுந்து நின்றார். இப்படி ஏற்ற தாழ்வுகளை மாறி மாறி சந்தித்த லிங்குசாமி தற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
விஜய் செயலை பார்த்து கற்றுக் கொண்ட பாடம்.. மனம் திறந்த பிரியங்கா சோப்ரா..20 வருட ஃபிளாஷ் பேக்
அதில் ஏதும் உண்மை இல்லை, தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும படத்தில் ராம் போத்தினேனி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கிறது.
வில்லனாக ஆதி
இப்படத்தில் பிரபல நடிகர் ஆதி வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மிருகம், அய்யனார், ஈரம், அரவான், யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி இருந்த நடிகர் ஆதி இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று முடிந்தது. நாசர், நடிகை நதியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
பர்ஸ்ட் லுக்
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்திலிருந்து அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்திற்கு 'தி வாரியர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் ராம் முறுக்கு மீசையுடன் மிரட்டலான போலீஸ் வேடத்தில் காணப்படுகிறார். எனவே படம் அதிரடி ஆக்ஷன் எண்டெர்டெயினராக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.