மலையாள நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் கடைசியாக 'குருப்' படம் கடந்த நவம்பர் 12 அன்று வெளியானது.
ஒரே சமயத்தில் மலையாளம், தமிழ், இந்தி,கன்னடம், தெலுங்கு என 5 மொழிகளிலும் வெளியான 'குருப்'. உலகளவில் 75 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை புரிந்தது.இது துல்கர் சல்மானின் முந்தைய படங்களின் வசூலை விட அதிகமாகும். இதன் மூலம் துல்கர் சல்மான் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படமாக குரூப் உருவெடுத்தது.
இந்நிலையில் தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 'ஹே சினாமிகா' படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார். இது இவருக்கு அறிமுக படமாகும், துல்கருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கின்றனர். துல்கர் சல்மானின் 33வது படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று (21.12.2021) வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் லுக் போஸ்டரை நஸ்ரியா - பகத் பாசில், சூர்யா - ஜோதிகா, ராணா டகுபடி ஆகியோர் வெளியிட்டனர். யாழன் எனும் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் RJ-வாக நடிக்கிறார். இந்த படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. JIO ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சேட்டிலைட் உரிமையை கலர்ஸ் டிவி கைப்பற்றி உள்ளது. மேலும் ஒடிடி உரிமையான டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த படத்திற்கு ப்ரீத்தி ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். கார்க்கி கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ராதா ஸ்ரீதர் எடிட்டராக பணியாற்றுகிறார். இந்த படம் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 நாள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.