WORLD OF VIKRAM : கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் GLANCE வீடியோ ரிலீஸ் எப்போ தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

The First Glance into the world of Kamal Haasan's VIKRAM
Advertising
>
Advertising

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

The First Glance into the world of Kamal Haasan's VIKRAM

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சிலநாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து காரைக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது.  பின் இந்த படத்தின் இரண்டாவது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து விக்ரம் படத்தின் Glance வீடியோ நாளை மாலை 6 மணிக்கு கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

The First Glance into the world of Kamal Haasan's VIKRAM

People looking for online information on Kamal Haasan will find this news story useful.