"இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமான கட் அவுட்"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமான கட் அவுட்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமான கட் அவுட் அமைக்கும் பணியை தொடங்கி இறுதி கட்டத்தை எட்டியது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் என்ஜிகே. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இப்படம், வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து தேவராஜ், பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம், அருள்தாஸ், இளவரசு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், திருவள்ளூர் திருத்தணி மாவட்டத்தில் இந்திய வரலாற்றில் முதன் முறையாக சூர்யாவுக்கு 215 அடியில் கட் அவுட் வைப்பதற்கான பணியை சூர்யா ரசிகர்கள்  தொடங்கியுள்ளனர்.  இதற்கு முன்னதாக விஸ்வாசம் படத்திற்காக தல அஜித்திற்கு இந்தியாவில் 190 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், சூர்யா ரசிகர்கள் தீவிர வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

The fans of Suriya from Tamilnadu are erecting a 251-foot cut-out of the hero at Thiruttani

People looking for online information on Dream Warrior Pictures, NGK, Ragul, Sai Pallavi, Suriya will find this news story useful.