LESLIE PHILLIPS : ஹாரி பாட்டர் மாயாஜால தொப்பியின் மந்திர குரல் மறைந்தது.. சோகத்தில் மூழ்கிய 90ஸ் கிட்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இங்கிலாந்தை சேர்ந்த பழம்பெரும் நடிகரான லெஸ்லி பிலிப்ஸ் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்திருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | போடு.! கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்'.. பட ஷூட்டிங் தென் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா..?

பிலிப்ஸின் முழு பெயர் லெஸ்லி சாமுவேல் பிலிப்ஸ் ஆகும். இவர் வடக்கு லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் எனும் பகுதியில் கடந்த 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி பிறந்தவர். 1950 களில் திரைப்பட உலகில் நுழைந்த பிலிப்ஸ், கேரி ஆன் எனப்படும் சீரிஸில் நடித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

அதனை தொடர்ந்து,  டாக்டர் இன் தி ஹவுஸ் (Doctor in the House) என்ற நகைச்சுவை சீரிஸில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் பிலிப்ஸ். இதன்பிறகு ஜேகே ரவுலிங் எழுதி வெளியான ஹாரி பாட்டர் நாவல் திரைப்படமாகியது. இதில், வரும் மாயாஜால தொப்பிக்கு இவர் குரல் கொடுத்திருந்தார். கரகரப்பும், கேலியும் நிறைந்த மந்திர தொப்பியின் குரல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், நேற்று பிலிப்ஸ் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 98 ஆகும். இதுபற்றி பேசியுள்ள அவரது மனைவி ஸாரா,"நான் எனது அன்பான கணவரை இழந்துவிட்டேன். பொதுமக்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த நடிகரை இழந்துள்ளனர். அவர் மிகவும் எளிமையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்ஸ் இதுவரையில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இன்றி பல கதாப்பாத்திரங்களுக்கு குரல் கொடுத்தும், தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வந்திருக்கிறார். அவருடைய மரணம் திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே திரை பிரபலங்கள் அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

Also Read | அஜித்குமார் நடிக்கும் 'துணிவு'.. படப்பிடிப்பு சென்னையில் இங்க தானா? வைரல் BTS ஃபோட்டோஸ்!

The Actor Leslie Phillips voice of Sorting Hat in Harry Potter passes away

People looking for online information on Harry Potter, Leslie Phillips, Leslie Phillips passed away will find this news story useful.