2022ல் உலகின் மிகச் சிறந்த 25 திரைப்படங்கள்.. இடம் பிடித்த 4 இந்திய படங்கள்! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'.

Advertising
>
Advertising

Also Read | 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் கேரக்டர் இதான்.. வெளியான கொல மாஸ் லுக்!

நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி விவசாயி’.

கடந்த 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம்’, மண் மணம் வீசும் காவியம்’  என்பது போன்ற உயர்ந்த அபிப்ராயங்களுடன் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தியேட்டர் வசூலில் தயாரிப்பாளருக்கு சாதகமாக அமையவில்லை.. இருப்பினும் 'கடைசி விவசாயி' படத்தை பார்த்த ரசிகர்கள் கதையின் நாயகனாக நடித்த நிஜ விவசாயி நல்லாண்டி ஐயா அவர்களையும், உலகத்தரம் வாய்ந்த படத்தைத் தயாரித்து அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாழ்ந்த  'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் நடிப்பையும் பாராட்டினார்கள்.

பல திரையரங்குகளில் படம் நிறைவடைந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று அரங்கம் அதிர கரவொலி எழுப்பி தங்களின் பாராட்டைத் தெரிவித்தனர்.

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும், கௌரவத்தையும் பெற்ற இந்த திரைப்படம், தற்போது தனது கிரீடத்தில் மற்றுமொரு வைர மகுடத்தைப் பெற்றுள்ளது. .

உலக அளவில் சிறந்த திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி இணையதளங்களில் Letterboxd எனும் இணையதளமும் ஒன்று. இந்த இணையதளத்தில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான, ஆண்டின் முதல் பாதியில் வெளியான சிறந்த படங்களை பட்டியலிட்டிருக்கிறது. உலகப்படங்கள் தரவரிசைப்படுத்தப்பட்ட அந்தப்பட்டியலில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்த 'கடைசி விவசாயி' திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்து தமிழ் சினிமாவின் பெருமையை உலகெங்கும் உரத்து முழங்கியிருக்கிறது.

இதனால் உற்சாகமடைந்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இந்த தகவலை புகைப்பட ஆதாரத்துடன் இணையங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த தளத்தில் உலக அளவிலான சிறந்த படங்களின் பட்டியலில் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த '’ஆர். ஆர். ஆர்'’  திரைப்படம் ஆறாவது இடத்திலும், 400 கோடிக்கு மேல் வசூல் செய்த உலக நாயகன் கமலஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் பதினோராம் இடத்திலும் வரிசை படுத்தப்பட்டிருக்கிறது என்பதும், இதில் 'விக்ரம்' படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாள படமான PADA  21 வது இடத்தை பெற்றுள்ளது.

Also Read | நடிகர் அஜித்குமாருடன் 10 மணி நேர விமானப்பயணம்.. பிரபல தொழிலதிபர் பகிர்ந்த வைரல் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

The 25 highest-rated narrative feature films on Letterboxd as at 30 June 2022

People looking for online information on Kadaisi Vivasayi, Letterboxd, RRR, Top 25 narrative feature films, Vikram will find this news story useful.