கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி காதல், சண்டை உள்ளிட்ட சர்ச்சைகளால் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் வின்னராக முகேன் அறிவிக்கப்பட்டார். இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக வைத்திருந்த சாண்டி இரண்டாம் இடம் பெற்றார்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் தற்போது பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுவருகின்றனர். அங்கே அவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய்யின் அம்மா ஷோபாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Tags : Bigg Boss 3, Shoba Chandrasekaran, Tharshan