பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படத்தை நடிகை பார்வதி பகிர்ந்துள்ளார்.
"நட்சத்திரம் நகர்கிறது" படத்தைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் பா. ரஞ்சித் & நடிகர் விக்ரமுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த தனது புகைப்படத்தை நடிகை பார்வதி திருவொத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மூவரும் (பா.ரஞ்சித், பார்வதி, விக்ரம்) மேல் நோக்கி கேமராவை பார்ப்பது போல இந்த புகைப்படம் அமைந்துள்ளது.