‘நாடகமாக நடித்தே காட்டிய பிரியங்கா & வருண்’!.. பிரியங்கா பற்றி பொரிந்து தள்ளிய தாமரை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டது.

thamarai smashing reply for ciby abhishek questions
Advertising
>
Advertising

இதன்படி, கடந்த 50 நாட்களில் எந்த போட்டியாளரின் சரியான முகத்தை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்று மற்ற போட்டியாளர்கால் விரும்புகிறார்களோ, அந்த போட்டியாளர்கள்,  இந்த வார லக்ஜூடி பட்ஜெட் டாஸ்க். இதில் 2 பிரேக்கிங் நியூஸ் அணிகளாக இருக்கும் சேனல்கள் மூலம் அவற்றை வெளிக்கொண்டு வரலாம்.

thamarai smashing reply for ciby abhishek questions

இதற்கென ஒவ்வொரு தரப்பினரின் கருத்தும் குறிப்பிட்ட டிவியின் ரிப்போர்ட்டர்களால் சேகரிப்பட்டு, பிக்பாஸ் ரெட் மற்றும் ப்ளூ டிவி தொகுப்பாளர்களிடம் கொடுக்க வேண்டும். இந்த சேனல்களின் டிஆர்பியை ஹவுஸ் மேட்ஸ்க்கு சஞ்சீவ் தெரிவிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

thamarai smashing reply for ciby abhishek questions

இதில் சிபி மற்றும் அபிஷேக் பிக்பாஸ் ரெட் டிவி செய்தி வாசிப்பாளர்களாகவும், ராஜூ மற்றும் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் ப்ளூ டிவி செய்தி வாசிப்பாளர்களாகவும் அமர்ந்துள்ளனர். முன்னதாக தாமரை மற்றும் பிரியங்காவுக்கு இடையில் கேப்டன்சியின் போது நடந்த சண்டை உட்பட, தாமரை பேசிய பலவற்றையும் பிரியங்கா தாமரையாக மாறி வருணுடன் இணைந்து நடித்து காண்பித்தார்.

இந்த நாடகத்துக்கு பின் சிபி, அபிஷேக் என பலரும் தாமரையிடம் கேள்விகளை கேட்டனர். அப்போது “பிரியங்கா உங்களுக்கு எந்த மாதிரியான ஃப்ரண்டு?” என தாமரையிடம் அபிஷேக் கேட்கிறார்.

இதற்கு பதில் பேசிய தாமரை, “எனக்கு ஃப்ரண்டே கெடையாது. நம்ம பேச்சு மட்டுந்தான் உயர்ந்தது, மத்தவங்களாம் தனக்கு கீழதான் இருக்கணும்னு நெனைக்குறது பிரியங்கா மட்டும்தான். இத நான் எங்க வேணா வந்து சொல்லுவேன்!” என்று கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thamarai smashing reply for ciby abhishek questions

People looking for online information on BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Priyanka imman fight, Priyanka thamarai fight, Thamarai Selvi, Trending, Vijay Television, Vijaytv will find this news story useful.