டிக்கெட் டூ கிராண்ட் ஃபினாலே: பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ கிராண்ட் ஃபினாலே டாஸ்க்கிற்கான போட்டிகள் நடந்தன. இதில் தாமரை மற்றும் பிரியங்கா இருவரும் மோதிக்கொண்ட சம்பவம் பிக்பாஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சக போட்டியாளரின் முட்டையை உடைக்கவும், தமது முட்டையை எதிர் போட்டியாளரிடம் இருந்து பாதுகாக்கவும் செய்வதே இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரின் நோக்கம்.

ராஜூ தாமரை சைலண்ட் வாக்குவாதம்
இது பற்றி ராஜூவும் தாமரையும் வாதம் செய்தபோது, பேசிய தாமரை, “நான் எப்போதும் தனித்து நின்று தனியாகவே விளையாடினேன். எனக்கென யாரும் துணை நிற்கவில்லை. குறிப்பாக நேற்றைய டாஸ்க்கில் யாருமே எனக்காக நிற்கவில்லை. நீ கூட வரலை ராஜூ. அது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அக்ஷரா, வருண் இருவரும் சென்றுவிட்டார்கள். நிரூப் இப்போது எனக்கு ஆறுதலாக இருக்கிறான். அவன் சென்றுவிட்டால் நான் இந்த வீட்டில் அனாதை தான் ராஜூ.” என்று கூறினார்.
சிபியின் எதிர்பாராத அறிவுரை
அப்போது அங்கு வந்த சிபி தாமரையிடம், “நீ ஏன் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்ப்பு வைத்துக் கொள்கிறாய்? ஒருவரிடம் நீ எதிர்பார்ப்பு வைக்கும்போது, அவர்கள் ஏதோ காரணத்தால், இன்னும் சொல்லப்போனால் அவர்களும் அதையே எதிர்பார்த்து அது ஒருவேளை உன்னிடம் நடக்காததால் உன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போகலாம்.
ஆனால் நீ எதிர்பார்த்தது நடக்காமல் போவதால், அல்லது நீ எதிர்பார்த்தவர்கள் உன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் உனக்கு இந்த கோபவம் உண்டாகிறது. எனவே எதிர்பார்ப்பே யாரிடமும் வைத்துக் கொள்ளாதே!” என அறிவுரை கூறினார். இதை கேட்ட பின்பு தாமரை, “நான் இனி எதிர்பார்க்கவே மாட்டேன்ப்பா.. இனி யாரிடமும் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை” என திட்டவட்டமாக பேசுகிறார்.
பிரியங்காவின் செம்ம Thug Life
இதே நேரம், பிரியங்கா செய்ததை கனக்கச்சிதமாக எடுத்து எடிட்டிங்கில் கோர்த்திருக்கிறார்கள். ஆம், ராஜூவிடம் தாமரை பேசியதையும், தாமரையிடம் சிபி பேசியதையும் கிச்சன் டெஸ்கிற்கு கீழே, அமர்ந்தபடி எதையோ சாப்பிட்டுக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தார் பிரியங்கா.
அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டதுமே, தலையில் அடித்துக்கொண்டு, “வர வர பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவா இல்லை சீரியலானு தெரியாம போய்க்கிட்டு இருக்கு யப்பா!” என தெறிக்கவிடுமாறு ஒரு கமெண்ட்டை தனிமையில் உட்கார்ந்து கூறினார்.