மீண்டும் தொடங்கிய THAMARAI VS PRIYANKA வார்த்தைப்போர்! கட்சி மாநாட்டுக்கு நடுவே நடந்த கபளீகரம்! #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா, தாமரை இருவருக்குமான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருவதை ஒவ்வொரு எபிசோடிலும் காணமுடிகிறது.

thamarai priyanka war of words during preech biggbosstamil5
Advertising
>
Advertising

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் பலவிதமான கட்சிகளையும் அவற்றுக்கான கொடி, பிரச்சார வாசகங்கள் உள்ளிட்டவற்றை வகுத்துள்ளனர். மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டியாளர்கள் கட்சியை தொடங்கி இருக்கின்றனர்.

thamarai priyanka war of words during preech biggbosstamil5

முன்னதாக கொடி நாட்டும் டாஸ்க் வந்தபோது தாமரை, அபினய் இருவருக்கும் இடையே வார்த்தை போர் பற்றி ஏரிந்தது. அதன்படி, தான் பார்த்து விளையாடுங்கள் என சொல்ல, இதனை அடுத்து அபினய் ஏதோ சொல்ல வர, அதற்கு தாமரை, தான் பொதுவாக தான் சொன்னதாகவும், அபினயை குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றும் வாதம் பண்ணினார்.

இதேபோல, “நானும் உன்னை சொல்லவில்லை, பொதுவாக தான் சொன்னேன். அதை மட்டும் உன்னால் ஏற்க முடியவில்லை, நீ சண்டைக்கு வருகிறாய்?” என்பது போல் அபினய் பேச இருவருக்கும் சண்டை முற்றியது. அப்போது பிரியங்கா இதில் தலையிட்டு, “இமான் உன் டிரெஸ்ஸை கிழித்து டாஸ்க்கில் கொடி நாட்ட முயற்சித்தபோது அவரிடம் இப்படி வாய் கிழிய சண்டை போடாமல் இப்போது வந்து சண்டை போடுகிறாய்” என கூற, தாமரைக்கும் பிரியங்காவுக்குமானதாக மாறியது.

பின்னர் உரக்கச் சொல் கட்சியைச் சார்ந்த பிரியங்கா, பாவனி, அபினய் அனைவரும் “தெரியாது.. தெரியாது என்று சொல்கிறீர்கள்..  ஆனால் நாடகம் போடுகிறீர்கள்” என்று பிரச்சார பாடலைப் பாடி, தாமரையை விமர்சித்தனர். ஆனால் தாமரை அதன் பின்னர், “நான் நாடகம் போடுகிறேன் என்கிறார்கள்.. எனக்கு என்ன அவசியம்?” என்று அதை தன்னுடைய தொழிலுடன் சம்பந்தப்படுத்தி புரிந்துகொண்டு ஃபீல் பண்ணி சிபி & ராஜூ உள்ளிட்டோரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

இதனை தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக இப்போது தாமரை மற்றும் பிரியங்கா இருவர் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்நிலையில் 3 கட்சித் தலைவர்களுமான பிரியங்கா, சிபி, சஞ்சீவ் ஒரே நேரத்தில் ஒவ்வொருவராக மற்ற கட்சிகளை தாக்கி பேசினர். அப்போது பிரியங்காவை சிபி மற்றும் சஞ்சீவ் இருவரும் விமர்சித்தனர்.

இதன் தொடர்ச்சியாக தாமரையையும் அவரது கட்சியையும் பிரியங்கா விமர்சிக்க, அப்போது கூட்டத்தில் இருந்து எழுந்து பேசிய தாமரை, பிரியங்காவிடம் “நான் உங்களுடன் நன்றாக பேசிக் கொண்டிருக்கும்போது நீங்கள் என்னை உயர்த்திப் பேசினீர்கள். இப்போது உங்களை எதிர்த்துப் பேசுவதால் நீங்கள் என்னை மட்டம் தட்டிப் பேச தொடங்கி விட்டீர்கள்! இந்த வீட்டில் எல்லாரையும் உசுப்பேத்துவது பிரியங்கா தான்.. உரக்கச் சொல்வேன் பிரியங்காதான்!” என்று கூறினார்.

முன்னதாக “இந்த வீட்டில் தாமரை நாடகம் போடுகிறாள் என்பதைத் தான் நான் சொன்னேனே, தவிர அவளுடைய தொழிலை மையப்படுத்தி நான் கூறவில்லை!” என்று பிரியங்கா விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thamarai priyanka war of words during preech biggbosstamil5

People looking for online information on Biggboss5tamil, BiggBossTamil5, Priyanka Deshpande, Thamarai Selvi, Trending, Vijay Television, Vijay tv will find this news story useful.