பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவருமே குழுக்களாக பிரிந்து, கட்சிகளைத் தொடங்கியுள்ளனர்.
தங்கள் கட்சிகளுக்கு மக்கள் குரல், உரக்கச் சொல்வோம், NNK என விதவிதமாக பெயர்களை சூட்டிய பிக்பாஸ் போட்டியாளர்கள் அவற்றுகு கொள்கைகளை வகுத்ததுடன், கொடி மற்றும் சின்னங்களையும் அறிவித்தனர். இதில் மக்கள் குரல் கட்சியின் மகளிரணித் தலைவர் தாமரைச் செல்வி உரக்கச் சொல் கட்சியை சேர்ந்த அபினய்யிடம் சண்டை போட்டுள்ளார்.
ஆம், 2 நாட்களாக பிக்பாஸ் போட்டியாளர்கள் கட்சிக் கொடிகளை நாட்டும் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இதில் முன்னதாக இமான் நட்ட கொடியை பிடுங்கி இமான் நட முயற்சித்ததால் தாமரைக்கும் இமானுக்கும் இடையில் சிறுது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பின்னர் சற்று வெடித்த தாமரை, இமானிடம் சமாதானமாய் போய்விட்டார்.
அதன் பின்னர், அபினய், தாமரை உள்ளிட்டோர் ஆடும்போதும் தாமரை அனைவரையும் பார்த்து இடித்துக்கொள்ளாமல் ஆடுமாறு பொதுவாக சொன்னதாக கத்தி சொல்ல, தானும் தாமரையை பார்த்து சொல்லவில்லை என்று அபினய் கத்தி வாதம் செய்தார். அப்போது அபினய்யை பார்த்து “ஏ.. என்னா கத்துற?.. உன்ன குறிப்பிட்டு சொன்னேனா?” என ஆவேசமானார்.
இதனிடையே பிரியங்கா, “முந்தைய சம்பவத்தில் இமான் உன் டிரெஸ்ஸை கிழிக்கும்போது வாய் கிழிய பேசாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் ஏன் தாமரை பேசுற?” என தாமரையை பார்த்து கேட்டார்.
இதனைத் தொடர்ந்து பிரியங்கா, பாவனி உள்ளிட்ட அணியினர், “தெரியாது தெரியாதுனு சொல்றீங்க.. ஆனா நாடகம் போடுறீங்க!” என டான்ஸ் ஆடிக்கொண்டே தாமரையை விமர்சித்தனர். இதேபோல் பிரியங்காவும் நிரூப்பும் தத்தம் கட்சிக் கொடிகளை நடும்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.