"பொய் பேசாத.. மொகறைய பாரு" - கை ஓங்கிய தாமரை!.. "ஏ.. மூடிட்டு உக்காரு" - அடிக்க போன பாவனி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 5 ஒரு புது டாஸ்கினால் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

Advertising
>
Advertising

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் முன்னதாக காயின் டாஸ்க் பரபரப்பாகவும் போட்டியாளர்களிடையே அவ்வபோது வாக்குவாதத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் புதிய டாஸ்க் போட்டியாளர்களிடையே கைகலப்பையே உண்டுபண்ணத் தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் அண்மையில் தான் தீபாவளி கொண்டாடி சுபிட்சமாக பிக்பாஸ் வீட்டுக்குள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதெல்லாம் தலைகீழாக மாறுவது போல், தற்போதைய புதிய டாஸ்கின்படி, பிக்பாஸ் போட்டியாளர்கள் அணிகளாக பிரிக்கப்பட்டு, பாலை சேகரிக்க கூடிய ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென சிறிய பாட்டில், பாலை சேகரித்துக்கொண்டு, தங்களது அணியில் இருக்கும் கேனில் வந்து நிரப்ப வேண்டும். அப்படி வரும்பொழுது யார் வேண்டுமானாலும் தடுக்கிறார்கள், யார் வேண்டுமானாலும் பிடுங்குகிறார்கள். இதையெல்லாம் தாண்டி பாலை எடுத்துவந்து தங்களுடைய கேனில் நிரப்புகிறார்கள்.

அதேசமயம் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும், அடித்துக்கொண்டும் ஓடி அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் உடைத்தும் கூட போட்டியாளர்கள் ஆக்ரோஷமாக இந்த டாஸ்க்குகளில் ஈடுபடுவதை புரோமோவில் காண முடிகிறது. இதில், தாமரைக்கும் பாவனிக்கும் நடந்த சண்டை புரோமோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி, “உங்கள் பாட்டில் காலி பாட்டிலாக இருந்தால் காட்டுங்கள்” என்று தாமரையை வருண் கேட்க, இன்னொரு பக்கம் பாவனி தாமரை மீது குற்றம் சாட்டுகிறார், அதன்படி, தாமரை கூட பாட்டிலில் இருந்து பாலை தன் பாட்டிலுக்கு ஊற்றிக்கொண்டாள் என்பதை சைகையால் காட்டி, “தாமரை கூட இப்படி இப்படி பண்ணா” என்று பாவனி கூறினார்.

இதைக் கேட்டதும் தாமரைக்கும் கோபம் பெருக்கெடுக்க, , “ஹே.. எனக்கு பொய் பேசுனா புடிக்காது.. பொய் பேசாத.. புள்ளையும் மொகறையும் பாரு.. போல அங்கிட்டு.. பொய் பேசாத.” என்று கை ஓங்க, பதிலுக்கு பாவனியும், “கத்தி பேசாத.. மூடிட்டு உக்காரு” என்று சொல்லி கை ஓங்குகிறார். இந்த காட்சிகள் புரோமோவில் இடம் பெற்றுள்ளன.

Thamarai pavani tried to attack each other biggbosstamil5

People looking for online information on Attack biggbosstamil5, Pavani, Thamarai will find this news story useful.