விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் பாடல் UPDATE கொடுத்த தமன்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் வாரிசு படத்தில் இசையமைப்பாளராக தமன் பணியாற்றி வருகிறார்.

Advertising
>
Advertising

வாரிசு ஃபர்ஸ்ட்லுக்


கடந்த ஜுன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் தனது 48வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த படமான ‘ வாரிசு’ படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகின. அந்த போஸ்டர்களில் விஜய் வசிகரமாகவும், ஸ்டைலாகவும் மிகவும் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் சிலாகித்து வந்தனர். அந்த மூன்று போஸ்டர்களும் கடந்த இரண்டு நாட்களாக ட்ரண்டிங்கில் இருந்தன. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு

வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத், சென்னை ஆகிய இடங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது.  இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் பணியாற்ற உள்ளார்.  இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து சரத்குமார் நடிக்கிறார். நடிகர் பிரபு, ஷ்யாம், ஜெய சுதா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு , நடிகை சங்கீதா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது சென்னையில் முக்கியமான காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது.

பாடல் அப்டேட்

வாரிசு படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். விஜய்யோடு அவர் பணியாற்றும் முதல் படம் இதுவாகும். இந்த படத்தின் பாடல்கள் பற்றிய அப்டேட்களை அவ்வப்போது தமன் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இயக்குனர் வம்சி மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோரோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள தமன் ‘வாரிசு’ படத்தின் பாடல் கம்போஸிங்கில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Thaman with vamsi for varisu movie song composing

People looking for online information on Vamsi, Varisu, Vijay, Vivek will find this news story useful.