சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் வென்றுள்ளார்.
Also Read | 5 தேசிய விருதுகளை வென்று அசத்திய சூரரைப் போற்று.. இது வேற லெவல் சம்பவம்!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2020ல் வெளியான "ஆல வைகுண்ட புரமலோ" படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது, தமன் இசையில் அனைத்து பாடலும் ஹிட், திரி விக்ரம் இயக்கிய இந்த படம் மொழி கடந்து தென்னிந்தியா முழுவதும் சக்க போடு போட்டது. இந்த அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் மருத்துவமனையில் சூழ்ச்சியின் காரணமாக மாறிவிடுகின்றன. பணக்கார ஆண் குழந்தை ஏழை வீட்டிலும், ஏழை வீட்டின் ஆண் குழந்தை பணக்கார வீட்டிலும் வளர்கின்றன.
ஏழை வீட்டில் வளரும் ஹீரோவுக்கு இந்த உண்மை தெரிய வர, சில செயல்கள் மூலம் பணக்கார வீட்டில் வேலையாளாக நுழைந்து அங்கு செய்யும் செயல்களே படத்தின் திரைக்கதை ஆகும்.
இந்த படத்தின் ஆல்பத்தில் ஆறு பாடல்கள் உள்ளன, இதில் சிறிவெண்ணேல சீதாராம சாஸ்திரி, காசர்லா ஷியாம், கிருஷ்ண சைதன்யா, ராமஜோகய்யா சாஸ்திரி, கல்யாண் சக்ரவர்த்தி மற்றும் விஜய் குமார் பல்லா ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
இந்த ஆல்பம் 6 ஜனவரி 2020 அன்று ஆதித்யா மியூசிக் லேபிளில் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது. யூடியூப்பில் 1 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற முதல் இந்திய திரைப்பட ஆல்பம் இதுவாகும்.
YouTube இன் சிறந்த 10 இந்திய இசை வீடியோக்களில், "புட்ட பொம்மா" மற்றும் "ராமுலூ ராமுலா" ஆகியவை 2020 இல் பட்டியலிடப்பட்ட ஒரே தென்னிந்திய பாடல்கள் ஆகும். இந்த படத்தின் அனைத்து 7 பாடல்களும் சார்ட் பஸ்டர் ஹிட் ஆனவை. கடைசியாக ஸ்ரேயா கோஷல் குரலில் சாமஜவரகமனா பாடல் ஆல்பத்தில் இடம் பெறாமல் திரைப்படத்தில் இடம் பெற்றது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த 68வது திரைப்பட விருதுகள் அறிவிக்கும் நிகழ்வில் இசையமைப்பாளர் தமனுக்கு AVPL படத்தின் பாடல்களுக்காக மத்திய அரசு சார்பில் தகவல் & ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தேசிய விருதை அறிவித்தது.
Also Read | இரண்டு தேசிய விருதுகளை வென்ற சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர்! முழு தகவல்