விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் அதே 11.01.2023 அன்று வெளியானது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்தபோது ஒரு மிகவும் நெகிழ்ச்சியான ஒரு தருணம் அரங்கேறி உள்ளது. ஆம், வாரிசு திரைப்படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.
இந்நிலையில் இதனை இயக்குநர் வம்சி, அவரது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் பார்த்துள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் திரைப்படம் முடிந்ததும் மகன் வம்சியை அவரது தந்தை ஆனந்த கண்ணீருடன் கட்டி அணைத்த எமோஷனலான தருணம் வீடியோவாக இணையத்தில் அதிகம் வைரல் ஆகி, பார்ப்போர் பலரையும் மனமுருக வைத்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் தமன், “எனதன்பு வம்ஷி, நான் என் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி கட்டிக்கொள்ள என் அப்பா என்னுடன் இல்லை. உங்களது தந்தையாரையே நானும் அன்பினால் கட்டி அணைத்துக் கொள்கிறேன். நீ சென்னை வா நண்பா கொண்டாடலாம்” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.