அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் நேற்று (அக்.12ம்) தேதி மாலை 6 மணிக்கு ரிலீசானது. பிகில் படத்தின் அனல் பறக்கும் டிரைலரில் இடம்பெற்ற வசனங்கள், விஜய்யின் லுக், ஃபுட்பால் கேம் என அனைத்து ரசிகர்கள் கொண்டாடும் விதமாக காட்சியமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு போட்றா வெடிய என வெறித்தனம் கூட்டும் விதமாக வெளியாகவிருக்கும் ‘பிகில்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.