கடந்த சில வருடங்களாக தனது ஒவ்வொரு பட இசை வெளியீட்டு விழாவின் போது தளபதி விஜய் பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில், அவர் முக்கியமான கருத்துக்களை தனக்கே உரிய ஸ்டைலில் பஞ்ச் டயலாக்குகளாக பேசுவது, குட்டிக் கதை சொல்வது உள்ளிட்டவை ஹைலைட்டாக அமையும். இதனையடுத்து அவரது பட இசை வெளியீட்டு விழா என்றாலே விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறும்.
முன்பெல்லாம் தனது படங்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது செய்தியாளர்களை சந்திப்பது என விஜய் தொடர்ந்து செய்து வந்தார். ஆனால் தற்போது இசை வெளியீட்டு விழாவில் பேசுவதோடு சரி. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு 'நண்பன்' வெளியான போது தளபதி விஜய் ,செய்தியாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், பஞ்ச் டயலாக்குகள் குறித்து கேட்டபோது, படங்களுக்கு தேவையானபோது பேச வேண்டியிருக்கும். சில படங்களில் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகியிருக்கு. அதனை நானே ஒத்துக்கிறேன். தேவைப்பட்டால் என்ன படத்தில் பஞ்ச் டயலாக்குகள் வரும். ஆனால் திணிச்ச மாதிரி இருந்தால் நானே விருப்பப்படமாட்டேன்'' என்றார்.
தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பாடல்கள், இசை வெளியீட்டு விழாவில் விஜய், விஜய் சேதுபதி இருவரது பேச்சுக்கள் உள்ளிட்டவை மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.