தளபதி விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் என்று ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தனர்.
திரைப்படத்தின் வேலைகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் படத்துக்கு அனிருத் இசையமைத்த பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், எதிர்பாராத கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் சூழல் உருவானது. சீக்கிறம் நிலை இயல்புக்கு திரும்பி தளபதியை பெரிய ஸ்க்ரீனில் சந்திக்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் சாந்தனு தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 4 நாள் முழு ஊரடங்கு பற்றி கருத்து தெரிவித்த அவர் ‘4 நாள் முழு ஊடரங்கு நல்ல விஷயம் என்றாலும், கோயம்பேடு சந்தை திறந்தது தவறான முடிவு என தோன்றுகிறது.’
’103 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என அவர் அந்த பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார். ஊரடங்கு சூழலில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் கோயம்பேடு மார்க்கெட் திறந்ததும் மக்கள் கூட்டம் அலைமோதியது சென்னை வாசிகளை கவலைக்குள்ளாக்கியது.