'குருவி' படம் குறித்த சர்ச்சை பேச்சு, நடிகர் பவன் விளக்கம் - ''தனுஷ் வேணும்னே சிரிச்சாரா ?''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த 'அசுரன்' படத்தின் 100வது நாள் விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 'அசுரன்' படத்தில் நடிகர் பவன் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் 'அசுரன்' 100வது நாள் விழாவில் நடிகர் பவனின் பேச்சு சர்ச்சைகளுக்குள்ளானது. அங்கு அவர் குருவி படத்தின் 150வது நாள் விழா குறித்து பேசினார். இது சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதங்களுக்குள்ளானது.

இதனையடுத்து அவர் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நான் விஜய்னு ஒறு வார்த்த கூட பேசவே இல்லை. விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். பிகில் படம் பார்க்கும் போது என் கூட வந்தவரு ஒரு சீன் பார்த்துட்டு என்னங்க அப்படினாரு, அதுக்கு நான் அவர் படம்னா அப்படித்தான் இருக்கும் என்றேன்.

நான் பேசுனது தப்புதான்.  நான் ஜாலியா பேசுற மாதிரி பேசிட்டேன்.  நாம நல்ல விதமா பேசியிருந்தா கூட வேற ஒரு சைட்ல இருந்து வேற மாதிரி திட்டியிருப்பாங்க. நான் பேசுனதுக்கு தனுஷ் வேணும்னே சிரிச்ச மாதிரி போட்டுட்டாங்க. அப்படி இல்லவே இல்ல. ஐயோ நம்மள மாட்டிவிட்டாப்ளயேனு தான் ஃபீல் பண்ணுவார்'' என்றார்.

'குருவி' படம் குறித்த சர்ச்சை பேச்சு, நடிகர் பவன் விளக்கம் - ''தனுஷ் வேணும்னே சிரிச்சாரா ?'' வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay's Kuruvi Controversial speech, Asuran Pawan Clarifies

People looking for online information on Asuran, Dhanush, Kuruvi, Pawan will find this news story useful.