வழக்கமாக மே மாதம் துவங்கும் ஐபிஎல் இந்த வருடம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகக தாமதாக இன்று (19/09/2020) முதல் துவங்கப்படவிருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவிருக்கின்றன.

எப்பொழுதும் தல தோனியின் ரசிகர்களுக்கு சிஎஸ்கே போட்டிகள் என்றாலே சற்று கூடுதல் ஸ்பெஷல். தோனி ஓய்வு அறிவித்ததற்கு பிறகு நடைபெறும் போட்டி என்பதால் இந்த போட்டியில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய் சில வருடங்களுக்கு முன்பு ஐபிஎலில் பார்வையாளராக கலந்து கொண்டு தல தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தளபதி விஜய் சிஎஸ்கே போட்டியின் போது, குதித்து டான்ஸ் ஆடி கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக தளபதி விஜய் பொது இடங்களில் அமைதியாக காட்சியளிக்கும் நிலையில் அந்த வீடியோவில் டான்ஸ் ஆடி என்ஜாய் பண்ணுவது அவர்களது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.