ALL புல்லிங்கோ'ஸ் READY..? - 64 டீமு தளபதி விஜய்யோட கேமு ! விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், படக்குழு சார்பாக ஃபுட்பால் டோர்னமெண்ட் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் வரும் அக்.12ம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் விளம்பர யுக்தியாக சென்னை சிட்டி ஃபுட்பால் டீமுடன் இணைந்து Football Knock Out Tournament நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளது. அதற்கான அறிவிப்பினை ஏஜிஎஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சென்னை சிட்டி ஃபுட்பால் டீமுடன் இணைந்து ‘பிகில்’ குழு நடத்தும் இந்த போட்டியில் 64 அணிகள் பங்கேற்கலாம். இந்த போட்டி வரும் அக்.19 மற்றும் அக்.20ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேளச்சேரியில் உள்ள டிக்கி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று(அக்.9) முதல் தொடங்குவதாகவும், முன்பதிவு செய்யும் இணையதள பக்கத்தின் முகவரியும் அந்த ட்வீட்டில் பகிரப்பட்டுள்ளது. 

இதனால், தளபதி விஜய்யின் வெறித்தனமான புல்லிங்கோ’ஸ் ஃபுட்பால் போட்டியில் கலந்துக் கொண்டு பிகில் போடலாமா என கோல் போட்டு அசத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு போட்றா வெடிய என வெறித்தனம் கூட்டும் விதமாக ‘பிகில்’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay's Bigil team to host Football tournament

People looking for online information on AGS Entertainment, Atlee, Nayanthara, Vijay will find this news story useful.