IT'S OFFICIAL: ‘பிகில்’ சத்தம் கடல்கடந்து காதை கிழிக்கப்போகுது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உட்பட 3 போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது.

இந்நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை யுனைட்டட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், எக்ஸ் ஜென் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay's Bigil overseas rights are officially bagged by X Gen Studio and United India Exporters

People looking for online information on Atlee, Bigil, Nayanthara, Overseas rights, Vijay will find this news story useful.