“ஒரு வருஷத்துக்கு அப்புறம் தளபதி தரிசனம்..!” - ‘பிகில்’ வேற லெவல் FDFS கொண்டாட்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிகாலை சிறப்புக் காட்சியுடன் ரிலீசானது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்தை தளபதி ரசிகர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து ‘பிகில்’ அடித்து தீபாவளி கொண்டாட்டத்தை பிகில் திரைப்படத்துடன் தொடங்கியுள்ளனர். ‘ராயப்பன்’, ‘மைக்கேல்’, ‘பிகில்’ என 3 கெட்டப்களில் நடித்திருக்கும் விஜய்யை காண பலரும் திரையரங்குகளுக்கு படையெடுக்கின்றனர்.

வெற்றி திரையரங்கிற்கு வெளியே தளபதி ரசிகர்களின் வெறித்தனமான கொண்டாட்டத்தை காண இந்த வீடியோவை க்ளிக் செய்யுங்கள்.

“ஒரு வருஷத்துக்கு அப்புறம் தளபதி தரிசனம்..!” - ‘பிகில்’ வேற லெவல் FDFS கொண்டாட்டம்! வீடியோ

Thalapathy Vijay's Bigil FDFS celebration at Vetri Theatre

People looking for online information on AGS Entertainment, Atlee, Bigil, Nayanthara, Vijay will find this news story useful.