BREAKING: பிகிலு சவுண்டு தெறிக்க.. தளபதி விஜய்யின் பிகில் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்கள் பிகிலடித்து பிகில் படத்தை கொண்டாடும் தருணம் நெருங்கியுள்ளது. பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்.19ம் தேதி நடைபெறவுள்ளதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், பிகிலு சத்தம் காதை கிழிக்க ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெறவிருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்தில் இருந்து வெளியான சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay's Bigil audio launch Sai Ram College on Sep 19

People looking for online information on Atlee, Bigil, Bigil Audio Launch, Nayanthara, Vijay will find this news story useful.