தளபதி விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை உருவாக்கி வருகிறார்.

'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.
விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.
இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர்,.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, பென்குயின், ஆதிபுருஷ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். கார்த்திக் பழனி மெர்குரி (2018) மற்றும் பேட்ட (2019) ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளராக பணியாற்றினார். பல ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியவர்.
கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார்.
இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய BTS ஃபோட்டோ வெளியாகி உள்ளது. படப்பிடிப்பில் நடிகர் விஜய், கைக்குழந்தையுடன் நவநாகரீக தோற்றத்தில் இந்த போட்டோவில் காணப்படுகிறார். இந்த போட்டோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது.