லோகி யூனிவர்ஸ்..!! தளபதி விஜய்யை சந்தித்த சந்தீப் கிஷன்.. தீயாய் பரவும் ஃபோட்டோ.. TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும், பான் இந்திய படம் “மைக்கேல்”.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | இந்தா அடுத்த அப்டேட்.. பத்து தல படத்தின் ஓடிடி உரிமம்.. வாங்கிய பிரபல முன்னணி நிறுவனம்!

பன்மொழி இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள்  இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றன.

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகியோருடன் திவ்யான்ஷா கௌஷிக், வரலக்‌ஷ்மி சரத்குமார், வருண் சந்தீஷ்,  அனுசிய பரத்வாஜ் ஆகியோர் இணைந்துள்ளனர்.  சாம் CS இசையமைக்கும் இந்த படத்துக்கு கிரன் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய,  திருப்பூரனேனி கல்யாண் சக்ரவர்த்தி, ராஜன் ராதமணாளன் மற்றும் ரஞ்சித் ஜெயக்கொடி இணைந்து வசனம் எழுதுகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

ஏற்கனவே வெளியாகியிருந்த இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் அண்மையில் சித் ஸ்ரீராம் குரலில் தெலுங்கில் வெளியான ‘Neevuntey Chaalu’ எனும் முதல் பாடல்  அனைத்துமே ரசிகர்களிடையே வைரலாகின. இந்நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி உலகெங்கும் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்யை இப்படத்தின் ரிலீஸ்க்காக இப்படத்தின் நடிகர் சந்தீப் கிஷன் சென்று சந்தித்துள்ளார். அத்துடன் மைக்கேல் படத்தின் ரிலீஸ்க்காக வாழ்த்து பெற்றார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் சந்தீப் கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்ததும், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டருக்கு பிறகு தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன் மற்றும் பலர் நடிக்கும் தளபதி 67 படபூஜை அண்மையில் நடந்தது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி 67 படத்தை எஸ்.எஸ்.லலித் குமாருடன் இணைந்து, ஜெகதீஷ் பழனிசாமி தயாரிக்கிறார்.

Also Read | தனுஷ் நடிக்கும் 'வாத்தி'.. பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா.. எப்போ? எங்கே? முழு விவரம்

Thalapathy Vijay wishes for sundeep kishan film Michael

People looking for online information on Michael, Sundeepkishan will find this news story useful.