தளபதி விஜய்.. நண்பனுக்காக BIGG BOSS பார்த்து.. "வெளில வந்தாப்றம் என்ன சொன்னாரு? EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தாம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது குறித்து தளபதி விஜய் என்ன சொன்னார் என்று நடிகர் சஞ்சீவ் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

Bigg Boss tamil 5

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தவர் நடிகர் சஞ்சீவ், பிரபல விஜே, திரைப்பட நடிகர், சின்னத்திரை நடிகர் என பன்முகங்கள் கொண்ட நடிகர் சஞ்சீவ், நடிகர் விஜய்யின் கல்லூரி கால நண்பர் ஆவார். 30 ஆண்டுகாலம் விஜய்யுடன் நட்புறவில் இருந்து வரும் சஞ்சீவ் விஜய்யுடனான பல படங்களில் நடித்துமுள்ளார்.

சஞ்சீவின் கதை

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க்கில் தன் கதையை பற்றி பேசியிருந்த நடிகர் சஞ்சீவ், தன் அக்காவும் பிரபல நடிகையுமான சிந்துவின் மரணம், தான் கரம் பிடித்த மனைவியும் நடிகையுமான ப்ரீத்தி, அக்கா மகளின் திருமணம், திரைத்துறையில் தான் தொடர்ச்சியாக செய்த முயற்சிகள், வாழ்க்கையின் பல்வேறு காலக்கட்டங்கள் என சகலத்தையும் பகிர்ந்திருந்தார்.

விஜய் பிக்பாஸ் பார்க்கிறாரா?

நடிகர் சஞ்சீவ் பிக்பாஸ் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாட்கள் கழித்து பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தார். அவர் வந்தவுடனேயே, மாஸ்டர் படத்தில் நடித்தவரும் பிக்பாஸ் போட்டியாளருமான சிபி, சஞ்சீவிடம், “நடிகர் விஜய் பிக்பாஸ் பார்க்கிறாரா?” என கேட்டிருந்தார். அப்போது நடிகர் சஞ்சீவ் சிரித்தார். இந்த நிலையில் சிபி கேட்ட அந்த கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது.

முதல்ல சிரிச்சான்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது குறித்து தளபதி விஜய்யிடம் சஞ்சீவ் கூறியது பற்றி சஞ்சீவ், பிஹைண்ட்வுட்ஸில் மனம் திறந்துள்ளார். அதில், “பிக்பாஸ்க்கு போவதை பற்றி நான் விஜய்யிடம் சொன்னேன். நல்லா என்கரேஜ் பண்ணாரு. முதல்ல சிரிச்சான். சிரிச்சுட்டு.. பிக்பாஸ்.. நீ.. உள்ள போயி சமாளிச்சிருவ.. ஆமா நீ அதுக்குள்ள போயி என்ன பண்ணுவ? என்று கேட்டான்.

அதற்கு நான், கூப்டுறாங்க போறேன், முடிஞ்சவரைக்கும் ஜாலியா இருப்பேன், எதாவது பிரச்சனைனா நாமளும் சேர்ந்து பிரச்சனை பண்ண வேண்டிதான். நமக்கு என்ன தோணுதோ அதை செய்ய வேண்டிதான் என்று கூறினேன். பின்னர், சரி.. பாத்துக்கோ.. ஆல் தி பெஸ்ட்.. போய் ஒரு கலக்கு கலக்கிட்டு வா.. என்றார்.

ரெகுலரா ஷோ பாக்க ஆரம்பிச்சேன் - விஜய்

பிக்பாஸில் இருந்து வெளிய போனதும், இதுபற்றி நானும் விஜய்யும் பேசினோம். உள்ள போகும்போது எப்படி போனியோ வெளில வரும்போது எந்த டேமேஜூம் இல்லாம நல்ல பேரோட வெளில வந்துருக்கனு எல்லாரும் சொல்றாங்க, அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ போனதுனால நானும் ரெகுலரா ஷோ பாக்க ஆரம்பிச்சேன் என்று விஜய் கூறினார்” என்று சஞ்சீவ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தளபதி விஜய்.. நண்பனுக்காக BIGG BOSS பார்த்து.. "வெளில வந்தாப்றம் என்ன சொன்னாரு? EXCLUSIVE வீடியோ

Thalapathy Vijay watched Bigg Boss 5 for Sanjeev what he said

People looking for online information on Bigg Boss Sanjeev, Bigg Boss Sanjeev Vijay, Vijay About Bigg Boss Sanjeev, Vijay watched Bigg Boss for Sanjeev will find this news story useful.