BREAKING : விஜய் - விஜய் சேதுபதியின் மாஸ்டர் - ஹிந்தி பேசவிருக்கும் வாத்தி... முக்கிய தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்துள்ள 'மாஸ்டர்' படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டிரெய்லர் குறித்து அர்ஜூன் தாஸ் மற்றும் ஹீரோயின் மாளவிகா சொன்ன தகவல்கள் தளபதி ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகி, யூடியூப், டிக் டாக் உள்ளிட்ட தளங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக  சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை B4U Broadcasting நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்துக்கு ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்து நிலைமை சீரான பிறகு இந்த படத்தின் வெளியீடு இருக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay, Vijay Sethupathi's Master movie important details here | தளபதி விஜய், விஜய்சேதுபதியின் மாஸ்டர் குறித்து முக்கிய தகவல்

People looking for online information on Master, Thalapathy, Vijay, Vijay Sethupathi will find this news story useful.