தளபதியின் 'மாஸ்டர்' நடிகருக்கு , சிவா ஜாலி கமெண்ட் - 'டான்ஸ் கூச்சப்படாம எப்பனாலும் PHONE பண்ணு'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் செகண்ட் லுக் பொங்கலை முன்னிட்டு 15-06-2020 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரி்ககிறார்.

இந்த படத்தில் சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், மகேந்திரன், ஸ்ரீமன், பிரேம், விஜே ரம்யா, தீனா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.  இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 'வணக்கம் சென்னை' படத்தில் இருந்து ஒசக்க பாடலை பாடியிருந்தார். அப்போது அருகில் அவரது தந்தையும் இயக்குநருமான பாக்யராஜ் ரசித்து கேட்டபடி இருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிவா அந்த வீடியோவிற்கு, பாட்டு பாடுனது நல்லா இருக்கு மச்சான். டான்ஸ் கத்துக்குறதுக்கு கூச்சப்படாம எப்பனாலும் கால் பண்ணு'' என்று ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay, Vijay sethupathi's Master actor Shanthnu Shares a video, Commented by Actor Shiva

People looking for online information on Master, Shanthanu Bhagyaraj, Vijay, Vijay Sethupathi will find this news story useful.