தளபதியின் 'மாஸ்டர்' தயாரிப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு - ''இந்த டைம் இசை வெளியீட்டு விழா...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழா சன் டிவியில் நேரடி ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தளபதியின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், ''நண்பாஸ் மற்றும் நண்பிஸ் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த முறை சன் டிவியில் நேரடி ஒளிபரப்பில் காணத் தயாராகுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளது.

'மாஸ்டர்' படம் ஏப்ரல் மாத வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. அண்மையில் தளபதி விஜய் இந்த படத்துக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருந்தது.

'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, ஷாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, பிரேம், கௌரி கிஷன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு | T

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.