தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த படம் நேரடியாக தியேட்டரில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு உறுதி பட தெரிவித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான படம் என்பதால் பண்டிகை நாட்களில் தான் வெளியாகும் என்பதால் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று கூறப்பட்டது. ஆனாலும் இதுகுறித்து தயாரிப்பாளர் எதுவும் அறிவிக்கப்பட்வில்லை.
இந்நிலையில் 'மாஸ்டர்' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகும் என எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.