"வாரிசு படத்தின் ரன்னிங் டைம் இது தானா?".. வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2023 அன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளது. வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "சம்பளத்தில் அரசுக்கு வரி கட்டிடுங்க.. மக்களுக்கு உதவி செய்ங்க".. வினோத்துக்கு அஜித் அட்வைஸ்!

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றிருந்தது.

இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் 5 பாடல்களும் வெளியாகி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, சமீபத்தில் வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், ரசிகர்களும் இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், வாரிசு படத்தின் ரன்னிங் டைம் குறித்து சில தகவல்களும் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, வாரிசு படம் 170 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ரன்னிங் டைம் என தகவல்கள் கூறுகின்றது. முன்னதாக, வாரிசு படத்திற்கு தணிக்கை குழு "U" சான்றிதழ் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 'துணிவு' படம் பார்த்த ஷாலினி அஜித்குமார்‌?.. ஷோ முடிந்ததும் போனி கபூர் போட்ட வைரல் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay varisu running time details deets

People looking for online information on Thalapathy Vijay, Varisu, Vijay will find this news story useful.