VARISU: "ஆடியன்ஸ் எல்லாம் ஒருத்தன தான் பாப்பாங்க".. ACTION காட்சிகளுடன் வெளியான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | பிரியங்கா மோகனுக்கு நடு ரோட்டில் ரோஜாப்பூ கொடுத்த ரசிகர் 😍.. அதுவும் லண்டன்ல! வைரல் வீடியோ

நடிகர்கள் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வாரிசு திரைப்படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் ஆகி 'யு' சான்றிதழ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்துள்ளனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் இன்று வாரிசு படத்தின் டிரெய்லர் காட்சிகள் வெளியாகி உள்ளன. சரத்குமார் விஜய்க்கு அப்பாவாகவும், ஜெயசுதா அம்மாவாகவும் நடித்துள்ளனர். மேலும் ஷாம், ஶ்ரீ காந்த் இருவரும் விஜய்யின் சகோதரர்களாக நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் வில்லனாக டிரெய்லரில் தோன்றியுள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள் & செண்டிமெண்ட் காட்சிகளுடன் டிரெய்லர் வெளியாகி உள்ளது. "ஆடியன்ஸ் எல்லாம் ஒருத்தன தான் பாப்பாங்க ஆட்ட நாயகன்" என்ற வசனம் டிரெய்லர் இறுதியில் இடம் பெற்றுள்ளது.

 

Also Read | "பதான் படம் பெரிய தோல்வி அடையும்" என சொன்ன ரசிகர்.. உடனே ஷாருக்கான் அளித்த தெறி பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Varisu Movie Trailer Released

People looking for online information on Thalapathy Vijay, Varisu, Varisu Movie Trailer, Vijay will find this news story useful.