தளபதி என்ட்ரி.. வெளியான வாரிசு படத்தின் OFFICIAL ரிலீஸ் தேதி.. வேறமாரி போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நடிகர்கள் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022-ல் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் அனைத்து 5 பாடல்களும் வெளியாகியுள்ளன.

வாரிசு படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படத்தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வாரிசு திரைப்படம் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Varisu, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Varisu Movie Release Date Announced

People looking for online information on Varisu, Vijay will find this news story useful.