விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தெலுங்கு மொழி போஸ்டர் வெளியாகி உள்ளது.

Also Read | என்ன ஆச்சு பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாக்கு? கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போன 80 MILLION FOLLOWERS
இந்த படத்திற்கு தமிழில் 'வாரிசு' எனவும் தெலுங்கில் 'வாராசுடு' எனவும் பெயரிடப்பட்டுள்ளது. The Boss Returns என்று துணை தலைப்பு இரண்டு மொழிகளின் போஸ்டரிலும் இடம்பெற்றுள்ளது. இரண்டு மொழி போஸ்டர்களிலும் அதே விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தெலுங்கு போஸ்டரில் PVP நிறுவனத்தின் லோகோவும் இடம்பெற்றுள்ளது.
இப்படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் பணியாற்ற உள்ளார். இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத், சென்னை ஆகிய இடங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து சரத்குமார் நடிக்கிறார். நடிகர் பிரபு, ஷ்யாம், ஜெய சுதா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு , நடிகை சங்கீதா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் பண்ணது இவர் தானா? செம்ம தகவல்