VARISU: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா.. முழுவீச்சில் டிக்கெட் கூப்பன் வினியோகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள்  வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

Also Read | போடு! அடுத்தடுத்த நாளில் ரிலீஸாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்கள்.. வேறமாரி!  

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வாரிசு படத்தின் முதல் 3 சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 3 பாடல்களை தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

இந்த பாடல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி   நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 4 மணிக்கு இந்த விழா துவங்க உள்ளது. இதில் வாரிசு படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் கூப்பன் வினியோகம் அதிகாரப்பூர்வமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் துவங்கி உள்ளது. விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், தளபதி விஜய் அவர்களின் வாழ்த்துகளோடு, பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் நமது தளபதி விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அனுமதி கூப்பன்களை அனைத்து மாநில,மாவட்ட தலைவர்களுக்கு அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் வழங்கப்பட்டது" என பதிவிட்டுள்ளார்.

 

Also Read | ஜெயிலர் படப்பிடிப்பில் வேட்டி சட்டையில் ரஜினிகாந்த்.. ரசிகருடன் எடுத்த வைரல் போட்டோஸ்! TRENDING

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Varisu Audio Launch Ticket Coupons

People looking for online information on Thalapathy Vijay, Varisu, Varisu Audio Launch Ticket, Vijay will find this news story useful.