நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் நேற்று (11.01.2023) வெளியானது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | சிவகார்த்திகேயன் பிறந்தநாள்.. வாழ்த்து கூறி Unseen போட்டோவை வெளியிட்ட அடுத்த பட இயக்குனர்!
நடிகர்கள் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சரத் குமார், ஷாம், பிரபு மற்றும் மேகா ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
ஒரு கம்பீரமான செல்வச் செழிப்பு மிக்க குடும்ப பின்புலத்துடனான , வாரிசு திரைப்படத்தின் கதை, குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், அதன் உறவுகளுக்கிடையே அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகள், எவ்வாறு அந்த உறவுகளிடையேயான உண்மையான வலிமையை சோதிக்கின்றன என்பதை பேசுகிறது. அன்பு நிறைந்த ஒரு, கூட்டுக் குடும்பத்தின் தலைவரான, தொழில் அதிபர் - ராஜேந்திரன் (சரத் குமார்) தனது மூன்று மகன்களிடையே யார் தனக்குத் தகுதியான வாரிசாக இருப்பார் என்பதை கண்டறியும் முயற்சியில் தன்னை அறியாமலேயே அவர்களை ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கச்செய்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
அவர்களில் முதல் இரண்டு மூத்த மகன்கள் ஜெய் (ஸ்ரீகாந்த்) மற்றும் அஜய் (ஷாம்) எதிர்பாராத விதமாக பிளவை ஏற்ப்படுத்தும் அழிவுப் பாதையைத் தேர்ந்தெடுக்க , இளைய மகன்- விஜய் (விஜய்) தனது குடும்பத்தை ஒன்றிணைத்து செல்லும் அதே வேளையில், தனது குடும்பத்தை அழிக்க நினைக்கும் ஒரு ஒரு எதிரியின் பிடியில் இருந்தும் தம் குடும்பத்தைப் பாதுகாக்கிறார் என்பதே இப்படத்தின் மாஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட் நிறைந்த திரைக்கதை.
இந்நிலையில் அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாரிசு திரைப்படம் தமிழிலும் மற்றும் இதன் டப் செய்யப்பட்ட திரைப்படம் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் வரும் பிப்ரவரி 22 முதல் ஒளிபரப்பாகிறது.
Also Read | Bakasuran : “பெண்கள் அழகா ப்ரொஃபைல் பிக்சர் வெக்கலாமா?” - மோகன்.G கருத்து குறித்து செல்வராகவன்..!