BREAKING: விஜய் - ராஷ்மிகா நடிக்கும் 'வாரிசு'.. இப்போ ஷூட்டிங் இந்த ஊர்லயா? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு குறித்த BREAKING தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | திருக்கடையூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஜய்யின் தாய் ஷோபா & தந்தை SAC.. முழு தகவல்

விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் வாரசுடு/வாரிசு படம் உருவாகி வருகிறது. 'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர்.

இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றன.

இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 3 போஸ்டர்கள் வெளியாகின.

இந்நிலையில் வாரிசு படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் இன்று (04.07.2022) துவங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜூலை 25 வரை இந்த படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நடக்கும் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | துல்கர் சல்மான் - மிருணாள் தாகூர் நடிக்கும் "சீதா ராமம்".. வெளியான அடுத்த சிங்கிள் டூயட் பாடல்!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Varisu 4th schedule starts today in Hyderabad

People looking for online information on Thalapathy Vijay, Thalapathy Vijay Varisu Movie, Vijay Varisu Shooting in Hyderabad will find this news story useful.