‘காதலுக்கு மரியாதை மறந்து போச்சா..? யாரு சொன்னா?’ - வைரலாகும் விஜய் பாடிய பழைய பாடல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் கடந்த அக்.25ம் தேதி ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்து வருகிறது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படம் ரிலீசாகி 10 நாட்களில் சென்னை பாக்ஸ் ஆபீஸில் சுமார் ரூ.10.79 கோடி வசூல் செய்துள்ளது. இதனிடையே தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த அக்.30ம் தேதி எகிப்து நாட்டில் ரிலீசான முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம் பெற்றது.

இந்நிலையில், பிகில் திரைப்படத்தில் விஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், விஜய் நடித்த சூப்பர்ஹிட் படத்தில் இடம்பெற்ற சூப்பஹிட் பாடல் ஒன்றை பாடிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 1997ம் ஆண்டு இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்னை தாலாட்ட வருவாளோ..’ பாடலை நடிகர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இசைஞானி இளையராஜா இசையில் பின்னணி பாடகர் ஹரிஹரன் மற்றும் பவதாரிணி இணைந்து பாடிய இப்பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டான பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay sung Kadhaluku Mariyadhai song video goes viral

People looking for online information on Bigil, Kadhaluku Mariyadhai, Shalini, Vijay will find this news story useful.