ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாடலாசிரியர் விவேக் இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே சிங்கப்பெண்ணே, வெறித்தனம் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 18) உனக்காக என்ற ரொமாண்டிக் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 19) இன்னும் சிறிது நேரத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவிருக்கும் விழா அரங்கு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.