WOW... அப்போ இது தளபதி தீபாவளி.. விஜய் ரசிகர்களுக்கு ஒரு மரண மாஸ் செய்தி... வாத்தி கம்மிங் ஒத்தே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் 'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் தளபதி 65 என பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் மாஸ்டர் டீசர் பற்றிய முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள, இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையில் மாஸ்டர் பட பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த மரண மாஸ் செய்தி தளபதி விஜய் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy vijay master teaser marana mass update மாஸ்டர் படம் பற்றி ஒரு மரண மாஸ் செய்தி

People looking for online information on Master, Teaser, Vijay will find this news story useful.