விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், விஜய் டிவி புகழ் தீனா, விஜே ரம்யா, ஸ்ரீமன், பிரேம், கெளரி கிஷன், மாஸ்டர் மகேந்திரன் என்று ஏராளமானோர் நடிக்கின்றனர்.
XB Film Creators இந்த படத்தை தயாரிக்கிறது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். டெல்லி, ஷிமோகா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் ’மாஸ்டர்’ திரைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில் கடந்த வருடம் சந்தியா சுவாமிநாதன் விஜய்யை 5 அடி உயர ஓவியமான வரைந்தார். இது சமூக ஊடகத்தில் அதிகமாக பகிரப்பட்டு சந்தியாவுக்கு பாராட்டுகளை பெற்றுத்தந்தது. இந்த ஓவியம் விஜயின் பார்வைக்கும் சென்றதையடுத்து சந்தியாவின் பிறந்தநாளன்று விஜய் அவரை நேரில் வரவழைத்து சந்தித்து தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சந்தியா, இந்த சந்திப்பு தன் பிறந்தநாளையும், 2020 புத்தாண்டையும் மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றியுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் தான் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர உள்ளதாக சந்தியா தெரிவித்துள்ளார்.