VIDEO: "என் VOICE தான் நெகடிவ்னு சொன்னாங்க.. ஆனா அந்த படம் ரிலீஸ் ஆனதும்..".. அர்ஜூன் தாஸ் VIRAL LIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கைதி, மாநகரம் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர்.

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்தார். நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படத்திலும், ‘கைதி’, ‘அந்தகாரம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்த இளம் நடிகர் அர்ஜூன் தாஸ்.

இந்நிலையில் தம் வாழ்க்கை, கரியர் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்ட அர்ஜூன் தாஸ், “ஒரு முறை ஒரு இயக்குநரிடம் கதை கேட்டு முடித்த பின், எல்லாம் ஓகே உங்க வாய்ஸ் தான் நெகடிவாக இருக்கு. வேற படத்தில் முயற்சி செய்யுங்கள் என்று சொன்னார். அவரே பின்னர் கைதி ரிலீஸ் ஆன பிறகு உங்கள் வாய்ஸ் தான் உங்களுக்கு ப்ளஸ் என அவரே போன் பண்ணி சொன்னார்!” என  தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் தாஸின் இந்த அனுபவம் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. மேலும் வசந்தபாலனுடன் தான் இணையும் அடுத்த படத்தில் விரைவில் நடிக்கவுள்ளதாகவும், தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார். ரசிகர்களுடன் அர்ஜூன் தாஸ் பகிர்ந்து கொண்ட முழு விவரங்களை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம். 

அர்ஜூன் தாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் வசந்தபாலன் இயக்க போவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.  இந்த படத்தை நண்பர்களுடன் இணைந்து தாம் தொடங்கி இருக்கும் யூ பாய்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

VIDEO: "என் VOICE தான் நெகடிவ்னு சொன்னாங்க.. ஆனா அந்த படம் ரிலீஸ் ஆனதும்..".. அர்ஜூன் தாஸ் VIRAL LIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy vijay master fame arjun das answers video

People looking for online information on Arjun Das, Lokesh Kanagaraj, Master, Vijay will find this news story useful.