நடிகர் சாந்தனு இறுதியாக 'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் நடித்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவ்வப்போது மாஸ்டர் பற்றின புதிய அப்டேட்களை ரசிகர்கள் அவரிடம் கேட்பதும் வழக்கம். இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் அவர் தனது மனைவியுடன் சேர்ந்து 'கொஞ்சம் கொரோனா, நிறைய காதல்' என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். யூடியூப்பில் இந்த குறும்படம் மில்லியன் கணக்கில் பார்வைகளை அள்ளியுள்ளது.
இந்நிலையில் நமது Behindwoods சேனலுக்கு அவர் அளித்திருக்கும் பிரத்தியேக பேட்டியில் தளபதி விஜய் அவரது படத்தை பார்த்து என்ன சொன்னார் என்பதை பற்றி கூறியுள்ளார். அவர் கூறும் பொழுது " நான் சும்மாதான் தளபதி விஜய்க்கு எனது குறும்படத்தின் டீசரை அனுப்பி வைத்தேன். அதை பார்த்த அவர், அட்றா... அட்றா... அட்றா...Fact’u Fact’u Fact’u" என்று கமெண்ட் அனுப்பியிருந்தார். அதை பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது.
பின்பு முழு படத்தையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். அந்த படம் அவருக்கு பிடித்திருந்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சி"என்று கூறியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயிருக்கும் நிலையில், படத்தின் டிரைய்லருக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.